வெள்ளவத்தையில் மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தல்.!

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் மேலும் ஒரு பிரதேசம் உடனடியாக அமுலாகும் வகையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. வெள்ளவத்தை – நஃபீர்வத்தை பிரதேசம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.ஏற்கனவே வெள்ளவத்தையில் மயூரா பிரதேசம் மற்றும் கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.