விபத்தில் ஒரு காலை இழந்த போதும் தனது சிறந்த தன்னம்பிக்கையினால் இளம் யுவதி எடுத்த புதிய அவதாரம்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனது காலொன்றை இழந்த யுவதி, தனது உலகம் அத்துடன் முடிந்து விட்டதாக முடங்கியிராமல் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.ஆம், அவர் ஒரு மொடலாக உருவெடுத்துள்ளார்.

மொடல் அழகியென்ற பெயரில் உலகின் பெரும்பாலானவர்கள் மனதில் பதிந்துள்ள பிரதிமையை உடைக்கும் விதமான கலக மொடலாக அவர் உருவெடுத்துள்ளார். மொடல் அழகியென்றால், அங்க லாவண்யங்கள் எல்லாம் பொருந்திய வாளிப்பான பெண் என்ற பிம்பத்தை, தனது ஒற்றைக்காலுடன் உடைக்கிறார் அந்த பெண்.அமெரிக்காவின் ஓக்லஹோமாவின் லாட்டனைச் சேர்ந்தவர் 26 வயதான தஹ்லர் செல்ப்.மோட்டார் சைக்கிள் பிரியையான அவர், 2016ஆம் ஆண்டு லூசியானாவில் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டபோது, காரொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானார். விபத்தில் அவரது இடது முழங்காலின் கீழ்ப்பகுதி கடுமையான சேதமாகியது. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார். அவரது இடதுகால் முழுமையாக சிதைவடைந்திருந்ததால் இதை மீள சரி செய்து, இயங்க வைக்க எந்த உத்தரவாதமுமில்லையென வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.இதையடுத்து தனது காலை அகற்ற அவர் சம்மதமளித்தார்.சிகிச்சையின் பின்னர் 5 மாதம் சக்கரநாற்காலியில் நாட்களை கடத்திய தஹ்லர், அதுவரை சுதந்திரமாக இருந்தவர், தற்போது பிறரில் தங்கியிருப்பதை போல உணர்ந்தார். அதையடுத்து,விரைவிலேயே செயற்கைக்கால் ஒன்றை பெற்று, தனக்காக பணியொன்றையும் தேடிக் கொண்டார்.தற்போது மீண்டும் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபடும் தஹ்லர், தனது பணியிடத்தில் 12 மணி நேரம் நின்று கொண்டும் பணியாற்ற முடியும் என்றார். உடல் ஊனங்கள் உங்கள் கனவுகளை அடைவதை தடுக்காது என்றும் தெரிவித்தார்.பிரபல உடற்பயிற்சி ஆடை புகைப்பட கலைஞர் கேசி விதர்ஸ் அண்மையில் அவரை அணுகி, அவரை புகைப்படம் எடுக்க விரும்புவதாகவும், மொடலாக பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அந்த யுவதி புதிய அவதாரம் எடுத்துள்ளார்.