தற்போது கிடைத்த செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளுக்கும் பூட்டு..!!

வடமாகாணத்தின் அனைத்து பொதுச்சந்தைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் பெறுவதில் தாமதம் நிலவிவரும் நிலையில், அதுவரை பொறுத்திருக்காது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.