அரசாங்க வேலை வாய்ப்பு..வடக்கு கிழக்கு கமநலத் திணைக்களங்களில் உள்ள 500ற்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்..

வடக்கு கிழக்கில் கம நல திணைக்களங்களில் 500 மேற்பட்ட வெற்றிடங்கள்.
அரிய சந்தர்பத்தை #தவறவிடாதீர்கள்.நீங்கள் GCE A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி பெற்றவரா?.ஆம் ,எனில் இன்றே விண்ணப்பிப்ப முடியும். கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தேர்ச்சியற்ற – சேவைத் தொகுதி 2 இன் (MN-01 -2016) இன் கீழ் கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளர் மற்றும் விவசாய #ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் பொருட்டான திறந்த போட்டிப் பரீட்சை – 2020.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் நாடெங்கிலும் வெற்றிடமாகவுள்ள கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் பதவிக்கு மாவட்ட மட்டத்தில் ஆட்சேர்ப்புச் செய்வதன் பொருட்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக தகமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப் பரீட்சையை 2021 ஆம் வருடம் பெப்ருவரி மாதம் நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கல்வித் தகைமைகள் :கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய இரு பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக ஒரே தடவையில் (06) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.

மற்றும்:கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்திலேனும் (01) (பொது வினாப்பத்திரம் தவிர) சித்தியடைந்திருத்தல்.சம்பள அளவுத்திட்டம் (மாதாந்தம்) : பொது நிர்வாக சுற்றறிக்கை 3/ 2016 இல. MN-01 -2016 சம்பள தொகுதியின் கீழ் ரூபா 27,140- 10×300- 11×350- 10×495- 10×660-ரூபா 45,540.00 ஆகும்.

விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி
பரீட்சை ஆணையாளர் நாயகம்
ஒழுங்கமைப்பு (தாபன மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள்) கிளை,
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,
பெலவத்தை,
பத்தரமுல்ல

‘Commissioner General of Examinations,
Organization (Institutional and Foreign Examinations) Branch,
Department of Examinations,
Pelawatta,
Battaramulla
P. O. Box. 1503

விண்ணப்ப முடிவுத்திகதி 15.01.2021.

அதிகளவு வெற்றிடங்கள் இருப்பதனால், நாடெங்கிலும் இருந்து தகுதியான அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.