மனைவி அடித்த வேதனையில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்த விவசாயி..!!

வேப்பவெட்டுவான், பண்டாரக்கட்டு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் வேலாயுதம் (56) என்பவரே தன்னைத்தானே கட்டுத்துப்பாக்கியால் சுட்டு மரணித்தவராவார். விவசாயியான இவர் கடந்த 13ஆம் திகதி அன்று காணாமல் போன தனது மாடுகளை தேடிச்செல்ல தயாரானபோது, மறுநாள் சித்திரை புத்தாண்டு தினமாக இருப்பதால் போகவேண்டாம் என மனைவி தடுக்க இருவருக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற இவர், புளுட்டுமானோடையில் வேளாண்மை செய்யும் நண்பர் ஒருவரின் வாடியிலேயே தங்கியிருந்துள்ளார்.தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்கியிருந்த இவர் அவ்வாடி உரிமையாளரிடம், அவரது மனைவி பிள்ளைகளால் தனக்கு ஏற்படுத்தப்பட்ட வன்மங்களைப் பற்றியும், தலையிலும், விலாவிலும் மற்றும் கை விரல்களிலும் ஏற்பட்டிருந்த அடிகாயங்களையும் காட்டி வேதனையை வெளிக்காட்டியிருக்கிறார்.இந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி அன்று காலை வாடிச் சொந்தக்காரர் தனது வீட்டுக்கு சென்று மீண்டும் மாலை 04.00 மணிபோல் வாடிக்கு வந்த போது இவரை காணவில்லை.மறுநாள் காலை வரை இவர் வராததால் அவரது உறவுகளுக்கு விடயத்தை தெரியப்படுத்தியதும், புளுட்டுமானோடையெங்கும் நேற்று முன்தினம் தொடக்கம் தேடுதல் நடத்தப்பட்டது.நேற்று (20) காலை 10.30 மணியளவில் அவரது சடலம் மீட்கப்பட்டது.புளுட்டுமானோடை மலை இடுக்கினுள் புகுந்து படுத்தவாறே, கழுத்தில் கட்டுத்துப்பாக்கியின் குழலை வைத்து கால் பெருவிரலினால் டிக்கரை அமிழ்த்தி வெடிக்க வைத்ததால் மண்டையோடு பிளந்த நிலையில் சடலம் காணப்பட்டது.