கொரோனா எட்டியும் பார்க்காத தேசத்தில் வாழ விருப்பமா..? கருடா விமானம் மூலம் கைலாசாவிற்கு செல்லலாம்..!! சுவாமி நித்தியானந்தாவின் தடலாடி அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியா வந்து சேருபவர்களை தமது கைலாசா நாட்டுக்கு கருடா எனப்படும் தமது நாட்டு சிறிய ரக விமானத்தில் இலவசமாக அழைத்துச் செல்வோம் என்றும் கைலாசா நாட்டுக்கான விசா 3 நாட்கள் மட்டும் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் என்று சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தடாலடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பலாத்கார வழக்கு உள்ளிட்டவைகளில் தேடப்படுகிறவர் நித்தியானந்தா. வெளிநாட்டு தீவு ஒன்றில் பதுங்கியபடி இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்தி இருக்கிறார்.அவருக்கு எதிராக இண்டர்போல் போலீசார் ரெட் கோர்னர் நோட்டீஸும் பிறப்பித்துள்ளனர்.மேலும், நாள்தோறும் வீடியோக்கள் வெளியிட்டு பேசியும் வருகிறார். அப்படியான வீடியோ பதிவில், நித்தியானந்தா சில அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம்.மூன்று நாள் விசா எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர் எனவும் சாமியார் நித்தியானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.