வெறும் அயிரம் ரூபாவுடன் தொழில் தொடங்கி தமது அபாரமான தன்னம்பிக்கையினாலும் உழைப்பினாலும் சிகரம் தொட்ட உலகின் மிகப் பெரும் செல்வந்தர்..!!

பேஸ்புக் நடத்தும் கருத்தரங்கில் தன் தந்தை 1000 ரூபாயுடன் தொழில் தொடங்கியவர் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் நெகிழ்ச்சியாக தெரிவித்தார் அம்பானி.

ப்யூல் ஃபார் இந்தியா 2020′ என்ற 2 நாள் கருத்தரங்கை பேஸ்புக் நடத்துகினறது. இன்று தொடங்கிய நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இருவரும் காணொளி மூலம் பங்கேற்று நீண்ட நேரம் உரையாடினர்.அப்போது முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அஞ்சலட்டை விலைக்கு தொலைப்பேசி அழைப்புகள் இருக்க வேண்டும் என விரும்பியது பற்றி குறிப்பிட்ட மார்க், அவரிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன என்று கேள்வி எழுப்பினார்.இதுகுறித்து தன் பதிலை கூறிய முகேஷ் அம்பானி ‘2020-ல் ஜியோ மூலம் இலவச அழைப்புகளை கொடுப்பதில் பெருமைக் கொள்கிறோம். எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் 40 கோடி மக்கள் உள்ளது அவருக்கு நாங்கள் செலுத்தும் பெருமை. என் தந்தை ஒரு பள்ளி ஆசிரியரின் மகன். 1960-ல் வெறும் ஆயிரம் ரூபாயுடன் மும்பைக்கு வந்த அவர், எதிர்கால தொழில்களில் முதலீடு செய்வோம் என்ற நம்பிக்கையுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.முதலில், தொழில் முனைவோருக்கு, தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பது முக்கியம். இரண்டாவது, எது செய்தாலும் அடுத்தவரின் உணர்வறிதல் மற்றும் படைப்பாற்றல் முக்கியம். என் தந்தையிடம் கற்றுக்கொண்ட இறுதியான ஒன்று, உறவு, நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவம்.ரிலையன்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களும் ஒரு பெரிய குடும்பம். இந்த பெரிய ரிலையன்ஸ் குடும்பத்திற்கு நாங்கள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்கிறோம். திடமான நம்பிக்கை, ஆர்வம், நோக்கம் ஆகியவற்றிற்காக பிணைக்கப்பட்டுள்ளோம்’ எனவும் ரிலையன்ஸ் நிறுவன அதிபரும் உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவருமாகிய திரு முஹேஸ் அம்பானி அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.