கணவனின் முறையற்ற செயற்பாட்டினால் பேஸ்புக் காதலனுடன் ஓடிய மனைவி..!!

மது அருந்தும்படி துன்புறுத்தும் கணவனை விட்டு, பேஸ்புக் காதலனுடன் ஓடிச் சென்ற மனைவியை மீள தன்னிடம் ஒப்படைக்கும்படி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.அம்பாறை, உகண பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.

25 வயதான திருமணமான இளம் பெண்ணொருவர், கொழும்பு மவுண்ட் லவனியாவிலுள்ள தமது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். பின்னர், அம்பாறை உகணவில் அவர் வசிக்கிறார் என்பதை அறிந்த கணவன், உகண பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தினர்.சிறு வயதில் சிறுவர் இல்லத்தில் வசித்த அந்த இளைஞன் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். மனைவியையும் மது அருந்த அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், அவரது இளம் மனைவி மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.இந்த நிலையில், அம்பாறை உகண பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக்கில் கடலை போட்டு, காதல் வசப்பட்டுள்ளார். பின்னர் அவருடன் ஓடிச்சென்று, இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.இனிமேல் மனைவியை மது அருந்த சொல்லி வற்புறுத்த மாட்டேன். தன்னுடன் அவரை சேர்த்த வைக்கும்படி கணவன் கதறியுள்ளார்.எனினும், பேஸ்புக் காதலனுடன் வாழப் போவதாக மனைவி அடம்பிடித்துள்ளார்.பின்னர், பொலிசார் இருவருக்கும் அறிவுரை கூறியதையடுத்து, கணவனும், மனைவியும் ஒன்றாக வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர்.