பலரையும் ஏமாற்றி ஏ.ரி.எம்.இல் கைவரிசையைக் காட்டிய பலே கில்லாடித் திருடன் அதிரடியாகக் கைது..!!

வவுனியா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தானியக்க இயந்திரங்களில் இருந்து பணத்தை திருடிய நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர். குறித்த நபர் தானியக்க இயந்திரங்களின் அருகில் சென்று நிற்பதுடன், வயது முதிந்தவர்களிற்கு உதவுவதுபோல அவர்களின் கடன் அட்டையையும், இரகசிய இலக்கத்தையும் திருடிவிட்டு, வேறு கடன் அட்டையை அவர்களிடம் வழங்கி வந்துள்ளார். பின்னர் குறித்த காட் இயங்கவில்லை என அவர்களிடம்தெரிவித்துவிட்டு வங்கி கணக்குகளில் இருந்து இலட்சக்கணக்கான பணத்தினை திருடிவந்துள்ளார்.இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிசில் 5 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொதுமக்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.அதன் நிமித்தம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், நேற்றையதினம் வவுனியாவில் உள்ள தானியக்க இயந்திரம் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நபர் பல்வேறு பகுதிகளில் இப்படியான தி்ருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.