பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டு பதவியிழந்ததும் கண்ணீர் விட்டு அழுத யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்..!!

வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் கண்ணீர் விட்டு அழுதார்.

யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று (16) இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன.வரவு செலவு திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டால், சபை முதல்வர் பதவியை இழக்கும் உள்ளூராட்சிசபை விதிமுறையின்படி ஆனோல்ட் இன்று பதவியை இழந்தார்.வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் முகத்தில் பிரதிபலித்தபடி காணப்பட்ட ஆனோல்ட், பின்னர் தனது அலுவலக அறைக்குச் சென்று கண்ணீர்விட்டு அழுதார்.இதையடுத்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உறுப்பினர்கள் அங்கு சென்று அவரை ஆறுதல்ப்படுத்தினர்.வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்தாலும், மீள நடக்கும் தேர்தலில் ஆனோல்ட்டே முதல்வராகும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.