கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி சோபியா ஜார்ஜியா ட்ரூடோ தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் உணர்ச்சி பூர்வமாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.பிரித்தானியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த கனடா பிரதமர் ஜஸ்ட்டி ட்ரூடோ மனைவி SOPHIE GREGOIRE TRUDEAU, அங்கிருந்து திரும்பிய பின் லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு உடனடியாக கொரோனா சோதனை எடுக்கப்பட்டது.அந்த முடிவுகள் வரும் வரை அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.இதையடுத்து SOPHIE-யின் கொரோனா பரிசோதனை முடிவுகள் கடந்த 12-ஆம் திகதி வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில், துரதிருஷ்டவசமாக எனது மனைவிக்கு கொரோனா உள்ளது.
அதனால். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.அதன் பின், ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது, ஆனால் அதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்தது.தற்போது, SOPHIE GREGOIRE TRUDEAU கொரோனாவிலிருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து SOPHIE தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் நன்றாக இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த எனது நலவிரும்பிகளுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.கனடாவில் 5,616 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 61 பேர் பலியாகிவிட்டனர். 445 பேர் குணமடைந்துவிட்டார்கள்.
Sophie Gregoire Trudeau gets clean bill of health #COVID19 pic.twitter.com/su0r6eFYFN
— rafah.alsaad@yahoo.com (@AlsaadRafah) March 29, 2020