உலக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி..உருமாறத் தொடங்கிய கொரோனா..!! தலையைப் பிய்த்துக் கொள்ளும் விஞ்ஞானிகள்..!!

லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபட்ட வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால் அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் அங்கு நாட்டை முடக்கும் நிலைக்கு அந்நாட்டு அரசாங்கம் இறங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் வேகமாக அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மெட் ஹன்ஹாக் தெரிவிக்கும் போது;லண்டன், ஹெர்ட்போர்ட்ஷையர், எசெக்ஸ் மற்றும் சில பகுதிகள் இன்று புதன்கிழமை முதல் மிக உயர்ந்த அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும்.மேலும் அவர் கூறும் போது, இங்கிலாந்தில் உலகத்தரம் வாய்ந்த மரபணு திறமைகள் இருக்கின்றன. அதற்கு நன்றி, கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவுகிறது.தற்போதைக்கு, இது ஒரு மோசமான நோய் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. கொரோனா தடுப்பூசிகளால் புதிய மாறுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருந்தாலும் கூட, புதிய மாறுபாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த உருமாற்றம் தற்போதுள்ள வகைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஆரம்ப ஆய்வு தெரிவிக்கிறது.புதிய உருமாற்றம் குறித்து இங்கிலாந்து ஏற்கனவே உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அறிவித்துள்ளது. மேலும் விஞ்ஞானிகள் புதிய உருமாற்றத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.திரைஅரங்குகள், வர்த்தக நிலையங்கள், என்பன மூடப்படும் என்றும் பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை எனவும் அவர் தெரிவித்தார்.மேலும், கொரோனா வைரசின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெற்கு இங்கிலாந்தில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.எனவே, மக்களை பாதுகாக்கவும், அதிக அளவு பாதிப்புகளை குறைக்கவும் முடியும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள் மிகவும் அவசியமானது என கருதுவதா சுகாதாரத்துறை அமைச்சர் மெட் ஹன்ஹாக் மேலும் தெரிவித்துள்ளார்.