வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய நடைமுறை.!!

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் நபர்களின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை தொடர்பான நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதற்கிணங்க புதிய 6 வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெல குணவர்தன வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகளை கடைப்பிடித்தால், அவர்கள் மேலதிகமாக வீடுகளில் சுயதனிமைப்படுத்தும் அவசியம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களாவன,

நாட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.அரசு சுகாதார அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் 14 நாட்களுக்குள் ஒரு அறையில், இரு நபர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும் அறையை பகிர்ந்து கொள்பவர்கள் ஒரே குடும்ப உறுப்பினராக மட்டுமே இருக்க வேண்டும்.இந்த அறையில் தனித்தனி சுகாதார வசதிகள் இருக்க வேண்டும் மற்றும் பிற தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எந்த வகையிலும் தனிமைப்படுத்தலுக்கு வந்த பிற நபர்களுடன் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 12-14 நாட்களுக்கு இடையில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும், மேலும் முடிவுகள் எதிர்மறையாக இருக்க வேண்டும்.14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் முடிவில், மையத்தின் பொறுப்பான அதிகாரி மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையில் திருப்தி அடைய வேண்டும்.மேற்கண்ட 6 அடிப்படை புள்ளிகளை நிறைவு செய்யும் ஒரு நபரை இன்னும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த தேவையில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுகிறார்.