அதிவேகத்தினால் நடந்த கோர விபத்து..தாயும் ஒன்றரை வயதுக் குழந்தையும் பரிதாபமாகப் பலி..!!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த கெப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.32 வயதான தாயும், மூன்றரை வயதுடைய மகனுமே உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் 8 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகன ஓட்டுனர் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளனர். இதில் 8 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டுனர் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மகாவ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.