மருத்துவமனையிலிருந்து தப்பியோடினார் கொரோனா நோயாளி.!! கைது செய்ய தேடுதல் தீவிரம்..!

கொரோனா நோயாளியொருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.வெலிசர சுவாச நோய்களிற்கான தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தப்பியோடியுள்ளார்.

நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் அளித்த முகவரியும் போலியானது என்று தெரியவந்துள்ளது. அவர் மருதானைப் பகுதியில் ஒரு முகவரி கொடுத்திருந்தாலும், அவர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர் என்பது தெரிய வந்துள்ளது.இந்த நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரிய வந்துள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.