யாழில் தீவிரமாக பரவும் கொரோனா..சற்று முன்னர் யாழில் முடக்கப்பட்ட வைத்தியசாலை!! மருத்துவர் உட்பட பலர் தனிமைப்படுத்தலில்!!

யாழ்.அளவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த வைத்தியசாலை 3 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், நோயாளிக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மற்றும் அங்கிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் வைத்தியசாலைகள் அதிகம் அக்கறை செலுத்தவேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் கேட்டிருக்கின்றனர்.