செல்பி மோகம்..எச்சரிக்கையையும் மீறிச் சென்று கணவன் குழந்தைகள் முன்னே பலியான இளம் குடும்பப் பெண்.!!

உலகப் புகழ்பெற்ற உயரமான பாறைமீது நின்றவாறு புகைப்படம் எடுத்த இளம் பெண்ணொருவர் 262அடி பள்ளத்தில் தவறி வீழ்ந்தமை பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்களால் கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது குடும்பத்தினர் கண்முன்னே இவ்வாறு விழுந்து பரிதாபகரமாக பலியானமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும்,ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுக்கும் போது 38 வயதான ரோஸி லூம்பா என்ற பெண் குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
விக்டோரியா பொலிஸாரின் தகவல்களின்படி “லூம்பா அந்த குன்றில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை கடந்து சென்று, புகைப்படத்திற்காக ஒரு பாறை மீது நின்று போஸ் கொடுத்தார். அப்போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையின் கண்முன்னே பாறையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்” என தெரிவித்தனர்.குன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்க மாநில அவசர சேவை குழுவினரும், விக்டோரியா பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.