கொழும்பில் கொரோனா பீதி..! தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு 242 குடும்பங்கள் அனுப்பி வைப்பு..!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.இதன் மூலம், இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களது எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது.தற்போதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 98 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். தொற்று நோய் தடுப்பு பிரிவின் புதிய தகவல்களுக்கமைய நேற்று (20) காலை 24 நோயாளர்களும், பிற்பகல் வேளையில் 8 தொற்றாளர்களும் ஒரு தொற்றாளர் மாலை வேளையும் இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 32 பேர் கொழும்பு – வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க மாவத்தை சேர்ந்தவர்கள் என அந்த பிரிவு தெரிவித்துள்ளது.அவர்களுடன் அந்த பகுதியில் இனங் காணப்பட்ட கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சற்றுமுன் முழுமையாக முடக்கப்பட்டன.அப்பகுதியில் இருந்து தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மேலும் 212 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு அனுப்பபப்படவுள்ளனர்.அனைவரையும் முகாமுக்கு அனுப்பும் பணிகள் தற்போதுஇடம்பெற்றுவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.