இன்று மாலை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.கொழும்பு தீயணைப்பு பிரிவினர் 9 தீயணைப்பு இயந்திரங்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்பு பணி நடந்து கொண்டிருந்த போது சட்டமா அதிபர் தப்புல டி லிவேர, டி.ஐ.ஜி அஜித் ரோஹன ஆகியோரும் அங்கு சென்று, நிலமைகளை அவதானித்தனர்.தீ விபத்தில் எந்த ஆவணங்களும் சேதமடையவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.