சற்று முன்னர் பலாலி வீதி உரும்பிராயில் கோர விபத்து..மயிரிழையில் தப்பிய உயிர்கள்.!

இன்று மாலை  6 மணியளவில் யாழ் பலாலி வீதி உரும்பிராயில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பலாலி வீதி ஊடாக சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள்
ஒன்றுடன் ஒன்று கொண்டதனால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இரு உந்துருளிகளுக்கும் குறிப்பிடத்தக்களவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.