யாழில் முடக்கப்பட்ட சந்தைகளில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் தீவிரம்..!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக சங்கானை சந்தை உட்பட பல சந்தைகள் முடக்கப்பட்டு வியாபாரிகளுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி இன்று காலை, சங்கானை சந்தையில் வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதேபோல் உரும்பிராய், ஊர்காவற்றுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தை வியாபாரிகளுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.