சுய தனிமைபட்டிருந்த நபர் திடீர் மரணம்..!! பி.சீ.ஆர் பரிசோதனைகள் ஆரம்பம்..

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், பிரேதப் பரிசோதனை நடத்தப்படுமாறு என பொகவந்தலாவை திடீர் மரண விசாரணை அதிகாரி வரதன் தனலெட்சுமி நேற்றிரவு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொகவந்தலாவை மோரா தேயிலைத் தோட்டத்தின் கீழ் பிரிவில் வசித்து வந்த 86 வயதான கருப்பையா முகன் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபரின் பேரன் கடந்த 10 ஆம் திகதி ஜா-எல சீதுவை பிரதேசத்திலிருந்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.இதனையடுத்து பொதுச் சுகாதார அதிகாரிகள் அந்த நபர் உட்பட வீட்டிலிருந்த 10 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.இந்த நிலையில் முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் டிக்கேயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மரணம் சம்பந்தமாக பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.