சற்று முன்னர் இலங்கையில் விமானப் படையின் விமானம் கோர விபத்து..!! திருமலையில் நிகழ்ந்த பயங்கரம்..!!

திருகோணமலையில் சீன விரிகுடாவிலிருந்து புறப்பட்ட PT-6 விமானம் கந்தளாயில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என விமானப்படை முன்னதாக அறிவித்திருந்தது.இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு விமானப்படை விமானி மட்டுமே இருந்தார்.விமானம் வயல்வெளியில் வீழ்ந்தது. விமானி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின்ற போதும், விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.