சற்று முன்னர் கிடைத்த செய்தி.. மருதனார்மடத்தில் வங்கி ஊழியருக்கும் கொரோனா..!!

மருதனார்மடம் சந்தை கொத்தணியில் வங்கி உத்தியோகத்தர் ஒருவரும் தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் 4 பேர் தொற்றிற்குள்ளாகியது தெரியவந்துள்ளது.இதில், ஒருவர் சுன்னாகத்திலுள்ள அரச வங்கியொன்றின் உத்தியோகத்தர் ஆவார். அவர் வைப்பாளர்களிடம் பணம் சேகரிக்க மருதனார்மடம் சந்தைக்கு தினமும் சென்று வந்தார்.இதனால் தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென கருதப்படுகிறது.