இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 309ஆக அதிகரிப்பு..!!

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் மேலும், 5 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது.தொற்று நோய் தடுப்பு பிரிவின் புதிய தகவல்களுக்கமைய நேற்று காலை வேளை 24 நோயாளர்களும், பிற்பகல் வேளையில் 8 தொற்றாளர்களும் ஒரு தொற்றாளர் மாலை வேளையும் இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 32 பேர் கொழும்பு – வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க மாவத்தை சேர்ந்தவர்கள் என குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் 98 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.மேலும், கொவிட்-19 தொற்று காரணமாக இலங்கையில் 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.