கோயில் ஐயரையும் விட்டு வைக்காத கொரோனா.!! சங்காபிசேகத்திற்க்கு சென்றவர்களுக்கு ‘சங்கு’..!!

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் இந்து ஆலய மதகுரு ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வீரமுனை பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றின் அர்ச்சகரான 65 வயதானவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுநீரக நோயாளியான இவர், கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக சென்றபோது கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி இவர் வைத்தியசாலைக்கு சென்றவேளை அங்கு சம்மாந்துறையை சேர்ந்த நபர் ஒருவர் கொரொனா தொற்று உறுதியாகி, ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து அந்த விடுதியில் இருந்த வீரமுனை மதகுருவுக்கு அன்றைய தினம் சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இதனால், கடந்த 10ஆம் திகதி மீளவும் சிகிச்சைக்கு சென்றார். கொரோனா நோயாளியுடன் விடுதியில் தங்கியிருந்தவர் என்ற அடிப்படையில் அவரும் பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது.அவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரும்இ நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர் அர்ச்சகராக செயற்படும் ஆலயத்தில் கடந்த 4ஆம் திகதி சங்காபிசேகம் நடந்துள்ளது. சங்காபிசேகத்திற்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வீரமுனை ஆலய சூழலில் பிசிஆர், அன்ரிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.