யாழில் உருவான கொரோனா கொத்தணி..மேலும் ஐவருக்கு தொற்று உறுதி..!!

யாழ். மருதனார்மடம் கொத்தணியில் மேலும் ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது; யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 98 பேருக்கு கொரோனாப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.ஏழாலையைச் சேர்ந்த 3 பேருக்கும், இணுவிலைச் சேர்ந்த 2 பேருக்கும், வவுனியாவைச் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.ஏழாலை மற்றும் இணுவில் தொற்றாளர்கள் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள்.வவுனியா தொற்றாளர்களில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர். இருவர் வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்குழியைச் சேர்ந்தவர்களாவர் என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.