கொரோனாவுக்கு பெற்ற தாயைப் பறிகொடுத்த பெண் ஒருவர் செய்த வியக்க வைக்கும் நற்செயல்..!!

கொரோனாவுக்கு பெற்ற தாயை பறிகொடுத்த பெண் ஒருவர், தன் சோகமான சூழலை மற்றவர்களுக்கு நன்மை தரும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொண்டுள்ளார்.

கால்கரியைச் சேர்ந்த Rose-Ann Normandeauவின் தாய் Anna Neal (85) கொரோனாவால் உயிரிழந்துவிட்டார்.அவர் இறந்தால் பிரமாண்டமாக இறுதிச்சடங்கு நடத்தவேண்டும் என்ற ஆசையைக் கூட, அவரது மகளால் நிறைவேற்ற முடியாத ஒரு சூழலை இந்த கொடிய கொரோனா உருவாக்கிவிட்டது.தன்னுடைய சோகத்தை மறக்க, தன் சோகச்சூழலையே மற்றவர்களுக்கு பயனளிக்கும் சூழலாக மாற்ற முடிவு செய்தார் Rose.அவற்றை பயன்படுத்தி மாஸ்குகள் செய்ய முடிவு செய்தார் Rose. அவை மருத்துவப் பணியாளர்களுக்காக அல்ல, பொது மக்களுக்காக… நீங்கள் வெளியே கடைக்குச் செல்லும்போது இந்த மாஸ்குகளை அணிந்து செல்லுங்கள், வீட்டுக்கு வந்ததும் அவற்றை துவைத்து காயப்போட்டுவிடலாம் என்கிறார் Rose.இதுவரை Roseம் அவரது சகப் பணியாளர்களும் சேர்ந்து 450 மாஸ்குகளை தைத்துவிட்டார்கள்.தொடர்ந்து நாளொன்றிற்கு 12 முதல் 14 மணி நேரத்தை மாஸ்குகள் செய்வதற்காக செலவிடும் Rose மற்றும் அவரது சகப் பணியாளர்கள், நம்மாலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கின்றனர்.சொந்த தாய் இறந்தாலும், அந்த சோகத்தையும் மற்றவர்களுக்கு பயனளிக்கக்கூடியதாக மாற்றிவிட்ட Roseஇன் சேவையும் பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை.