இலங்கையில் உச்சத்திற்குச் சென்ற தேங்காயின் விலை..!!

இலங்கையில் தேங்காயின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சமகாலத்தில் தேங்காய்களின் எண்ணிக்கையில் மிகவும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அணில்கள் மற்றும் குரங்குகளினால் தெங்கு பயிர்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நாட்களாக தேங்காய்களுக்கு நிர்ணய விலை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட போதிலும் தற்போது அவை செயற்படுத்துவதில்லை எனவும் கூறப்படுகின்றது.