உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை கல்ப்னா சாவ்லாவின் மறுபிறவி இலங்கையில்..? பட்டையைக் கிளப்பும் சிறுவனின் அதிரவைக்கும் காணொளி.!

17 வருடங்களின் முன்னர் விபத்தில் உயிரிழந்த விண்வெளி வீரர் கல்பன சாவ்லா இலங்கையில் சிறுவனாக மறுபிறவியெடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் வேகமான வதந்தி பரவி வருகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கணையாக பதிவான அமெரிக்க விண்வெளி வீராங்கணையின் வாழ்க்கை சம்பவங்களை போல, தனது கடந்தகால வாழ்க்கை சம்பவங்களை அந்த சிறுவன் குறிப்பிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களையடுத்து இந்த பரபரப்பு கிளம்பியுள்ளது.கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த செனுர என்ற 7 வயது சிறுவனே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சரளமாக ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுவதுடன், சிறந்த நுண்ணறிவு மற்றும் பொது அறிவைக் கொண்டவராக சிறுவன் காணப்படுகிறார்.ஆரம்பக் கல்வியை தொடங்கிய செனுர, ஆங்கிலம் அல்லது வேறு எந்த வெளிநாட்டு மொழியையும் படித்ததில்லை அல்லது அது தொடர்பான யாருடனும் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று அவரது பெற்றோரும் குடும்ப உறுப்பினர்களும் கூறுகிறார்கள்.பொருளாதாரரீதியில் நெருக்கடியான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், செனுரவின் ஆரம்பக் கல்விக்கு கூட நிதியளிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.இருப்பினும், தனது கடந்தகால வாழ்க்கையென சிறுவன் கூறும் கதைகளில், விண்வெளி பயணம் மற்றும் விண்கலம் பற்றிய வியக்கத்தக்க தகவல்கள் உள்ளன.பல சமூக ஊடக பயனர்கள் செனுரவின் கடந்தகால வாழ்க்கை பற்றிய கதைக்கும் 2003 இல் விபத்தில் மரணித்த இந்தோ-அமெரிக்க விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் கதைக்கும் உள்ள ஒற்றுமையை குறிப்பட்டு வருகின்றனர்.