கொரோனா பீதியினால் சற்று முன்னர் முடக்கப்பட்டது உரும்பிராய் மீன் சந்தை!!

யாழில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில் பல இடங்கள் முடக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், உரும்பிராய் சந்தியிலுள்ள மீன் சந்தை கொரோனா தொற்று அச்சத்தினால் சற்று முன்னர் முடக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர், கடந்த பல தினங்களில் உரும்பிராய் சந்தியிலுள்ள மீன் சந்தைக்கு அடிக்கடி மீன் வாங்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இன்று குறித்த மீன் சந்தையை சுகாதாரப் பிரிவினர் பொலிஸாருடன் சென்று, உடன் அமுலுக்கு வரும் வகையில் மீன் சந்தையின் செயற்பாடுகளை முற்றாக முடக்கியுள்ளனர்.நேற்றும், நேற்று முன்தினமும் மருதனார்மடம் பொதுச் சந்தையில் பல கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு, மருதனார்மடம், உடுவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உரும்பிராய் பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு, இன்றைய தினம் மீன் சந்தையும் முடக்கப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பாரிய பீதியைத் தோற்றுவித்துள்ளது.