புலம்பெயர் தேசத்தில் இலங்கைத் தமிழ் இளைஞன் தற்கொலை..!! கதறித்துடிக்கும் உறவுகள்..!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி சென்ற வருண்ராஜ் ஞானேஸ்வரன் (18) என்பவரே இவ்வாறு மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தான் தங்கியிருந்த Sale பகுதியிலிருந்து மெல்பேர்னுக்கு வந்த வருண்ராஜ், கடந்த 5ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.