சிறந்த தொழில் வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு நல்ல செய்தி..!! அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு..!

நாடு முழுவதும் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, இளைஞர்களுக்கு தொழிலுக்கான கதவுகளை திறக்கும் திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரவித்தார்.இதன் முதலாவது நிகழ்வு பத்தரமுல்ல அப்பே கமவில் ஆரம்பிக்கப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவங்ச,தொழில் எதிர்பார்ப்புடன் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் சந்தர்ப்பங்கள் தொடர்பில் வழிகாட்டி அவர்களது விருப்பத்திற்கமைவாக உகந்த தொழிலை பெற சந்தர்ப்பம் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் முதற்கட்டமே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும், அமைச்சர் விமல் வீரவங்ச, மேலும் தெரிவித்துள்ளார்.