இலங்கையில் 33 ஆயிரத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!! ஒரே நாளில் 503 பேருக்குத் தொற்று..!!

இலங்கையில் நேற்று 655 கொரோனா தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டனர்.

பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எணணிக்கை 32,790 ஆக அதிகரித்தது.நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 503 நபர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் இருந்து 147 நபர்கள் அடையாளம் காணப்பட்ட னர்.வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.489 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,793 ஆக உயர்ந்தது.62 மருத்துவமனைகளில் 8,845 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 444 நபர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.