உடுவில் முடக்கம் உடனடியாகத் தளர்வு..!! மருதனார்மடம் வியாபாரிகளுக்கு 2 வாரங்கள் தனிமைப்படுத்தல்.!!

யாழ்ப்பாணத்தின் உடுவில் பகுதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த முடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது. வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மருதனார்மட சந்தை வியாபாரிகள் 398 பேர் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள்.எனினும், மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி வர்த்தக நிலையங்கள் இரு வாரம் இயங்காது.தெல்லிப்பளை மற்றும் உடுவில்க் கோட்டப் பாடசாலைகள் இரு வாரம் இயங்காது எனவும் தெரிவிக்கபடுகின்றது.