கொரோனாவின் எதிரொலி..யாழில் 73 பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல்வரை பூட்டு..!!

யாழ்.தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் கல்விக் கோட்டத்துக்கு உள்பட்ட33 பாடசாலைகளும் தெல்லிப்பழை கல்விக் கோட்டத்துக்கு உள்பட்ட 40 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது.மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணியின் பின்இந்த இரண்டு கல்விக் கோட்டப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.இதேவேளை, மருதனார்மடம் கோரோனா தொற்றுத் கொத்தணியின் முதலாவது நபரின் மகளுக்கு நேற்று தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த வாரம் பாடசாலைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.