யாழ். சுன்னாகம் பிரதேசம் முடக்கப்படவில்லை..!! யாழ். அரச அதிபர் அறிவிப்பு..

யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற செய்திகளில் உண்மையில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தி தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உடுவில் பிரதேசத்தில் மாத்திரமே தற்காலிக நடமாடத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் – சுன்னாகம் முடக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.