சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ் திருநெல்வேலி சந்தையிலும் பி.சீ.ஆர் பரிசோதனை..!! இன்றிரவு முடிவுகள்..!

யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தையில் 39 பேரிடம் இன்று பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் இந்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி சந்தையில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட 39 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.இந்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.