யாழில் கொரோனா பீதி..உடுவில் பிரதேச செயலர் பிரிவில் பலத்த பாதுகாப்பு..போக்குவரத்துகள் முடக்கம்..!!

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, எல்லைக் கிராமங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செல்பவர்களே உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 7 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த பிரதேச செயலாளர் பிரிவு முழுவதும் நேற்று இரவு முதல், மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.