யாழ் உடுவில் பிரதேச செயலர் பிரிவு முடக்கத்தினால் வெறிச்சோடிப் போன வீதிகள்..(படங்கள் இணைப்பு)

பொதுமக்கள் நடமாடத்தடை விதிக்கப்பட்ட மருதனார்மடம் பகுதியின் இன்றைய காலைக் காட்சிகள் இவை.

மருதனார்மட சந்தை வியாபாரியொருவர் தொற்றிற்குள்ளானதையடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றும் கணிசமானவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டலாமென்ற அச்சம் நீடித்து வரும் நிலையில், மருதனார்மடம் பகுதி வெறிச்சோடிப் போயுள்ளது.இதேவேளை, உடுவில் பிரதேச செயலக பகுதிக்கு நடமாட்ட தடைவிதிக்கப்பட்டுள்ள போதும், அந்தப் பகுதியின் ஊடான வீதியை ஏனைய பகுதியிலுள்ளவர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும்.