இலங்கையில் இன்று 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 674 பேர், மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். சிறைகளில் இருந்து 81 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட- பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.4 வெளிநாட்டினர் உட்பட 8,679 பேர் தற்போது நாடு முழுவதும் 62 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று குணமடைந்த 473 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,304 ஆக உயர்ந்தது.கொரோனா தொற்று சந்தேகத்தில் 485 பேர் தற்போது மருத்துவக் கவனிப்பில் உள்ளனர்.