நாட்டின் பல பாகங்களிலும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்..!!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள். இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் 445 தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளார்கள்.

இதில் கொழும்பில் -15 பேரை சேர்ந்த 175 பேரும், தெமட்டகொடையைச் சேர்ந்த 49 பேரும், கொம்பெனி தெருவை சேர்ந்த 36 பேரும், வெள்ளவத்தையை சேர்ந்த 32 பேரும், மருதானையை சேர்ந்த 35 பேரும் இதில் உள்ளடங்குகின்றார்கள்.இதனைத் தவிர நாடளாவிய ரீதியில் 762 பேர் கொரோனா தொற்றாளிகளாக கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டறியப்பட்டதாக கொரோனா தடுப்பு தேசிய செயலகம் அறிவித்திருக்கிறது.நேற்று மாத்திரம் நாடளாவிய ரீதியில் 13 ஆயிரத்து 864 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்றைய தினத்தில் வத்தளை, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பிரதேசங்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்