ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதிலும் கொரோனா தடுப்பூசி விநியோகம் ஆரம்பம்.!! பெருமகிழ்ச்சியில் நாட்டு மக்கள்.!

அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தடுப்பூசிக்கு அங்கிகாரம் அளித்தது தொடர்பாக அதிபர் ட்ரம்ப், ஊடகங்கள் மத்தியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதன்போது, அமெரிக்காவில் முதல் தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். ஏற்கனவே ஒவ்வொரு மாகாணத்துக்கும் நாங்கள் தடுப்பூசியை அனுப்பும் பணியை தொடங்கி விட்டோம்.யாருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்த மாகாண ஆளுநர்கள் முடிவு செய்வார்கள்.மூத்த குடிமக்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.இது இறப்புகளையும் நோயாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் குறைக்கும் என்றார்.இதேவேளை – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தினமும் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியுள்ளது.இதனால், அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. இதற்கு இந்த மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கின. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலன் அளிப்பதாக பரிசோதனைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி பைசர் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது.
இதன்பிரகாரம், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவினர் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவுகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.இதன்பின், தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டுவர நிபுணர் ஆலோசனை குழுவில் இடம்பெற்ற 17 பேர் ஆதரவு தெரிவித்தனர். 4 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.நிபுணர் ஆலோசனை குழுவில் அதிகபட்ச உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததையொட்டி பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியானது.இதன்படி அமெரிக்காவில் பைசர் நிறுவனம், மற்றும் பயோ என்டெக் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.ட்ரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.