இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் தொடர்மாடிக் குடியிருப்புகள்..!!

கொழும்பில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்படுவதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இன்று (12) காலை சிங்கள ஊடகமொன்றுக்கு இதை குறிப்பிட்டுள்ளார்.அதன்படி மட்டக்குளிய ராண்டியா உயன, மோதர மெத்சந்த செவன, மோதர மிஹிஜயா செவன கிராண்ட்பாஸ் முவாடோரா உயன, கிராண்ட்பாஸ் சமகிபுர மற்றும் தெமடகொட மிஹிந்து செத்புர குடியிருப்புக்கள் தனிமையில் இருந்து அகற்றப்படும்.எனினும், ஏனைய ஏழு வீட்டுத் திட்டங்களைத் தனிமைப்படுத்துவது தொடரும் என்றும் ராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.