இலங்கையில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..நேற்று மட்டும் 762 பேருக்குத் தொற்று..!!

இலங்கையில் நேற்று 762 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 445 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

கொழும்பில் அடையாளம் காணப்பட்டவர்களில், மட்டக்குளியிலிருந்து 175, தெமட்டகொடவிலிருந்து 49 பேர், வெலிக்கடை சிறையிலிருந்து 14 பேர் அடையாளம் காணப்பட்டனர்.ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து மொத்தம் 13,710 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கம்பஹாவிலிருந்து 135 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 75 பேர் மகர சிறைக்கைதிகளாவர்.களுத்துறையிலிருந்து 36 பேரும், காலியிலிருந்து 27 பேரும், கண்டி மற்றும் குருநாகலில் இருந்து தலா 19 பேரும் பதிவாகியுள்ளனர்.அம்பாறையில் 17 பேரும், புத்தளத்தில் 10, இரத்னபுரி, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரத்திலிருந்து தலா 9 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 8 பேரும், மாத்தளையை சேர்ந்த 5 பேரும், பதுளையிலிருந்து 4 பேரும், கேகாலையிலிருந்து 3 பேரும், வவுனியா, ஹம்பாந்தோட்டயிலிருந்து தலா 2 பேரும், மொனாராகல மற்றும் மாத்தறையிலிருந்து தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.