இலங்கையில் பதிவான 147வது கொரோனா மரணம்..!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.