கூகுள் Map ஐ நம்பி (மறை 50 பாகை) உறைபனி நிறைந்த காட்டிற்குள் காரைச் செலுத்திய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்.!!

ரஷ்யாவில் இரண்டு 18 வயது நண்பர்கள் காரிலேயே உறைந்து இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜாக்குட்டஸ் என்னும் இடத்தில் இருந்து, மெகடான் என்னும் நகர் 1076 KM தூரத்தில் உள்ளது.

தற்போது ரஷ்யாவில் கடும் குளிர் காலம் என்பதனால். குறித்த 1067KM கடக்க 32 மணி நேரம் பிடிக்கும். இந்த நிலையில், குறித்த இரண்டு 18 வயது நண்பர்களும், காரில் பயணம் செய்தவேளை கூகுள் சட் நவ் மேப் காட்டிய பாதை ஒன்றை எடுத்துள்ளார்கள். அது மிகவும் கடுமையான உறை பனி கொண்ட காடு.அந்தக் காட்டுக்குள் அவர்கள் காரை ஓட்டிச் சென்றவேளை, கார் ரேடியேட்டரில் உள்ள நீர் உறைந்து விட்டது. இதனால், கார் எஞ்சினும் குளிர் காரணமாக உறைந்து நின்று விட்டது. இதனால், கடும் குளிரில் சிக்கி அவர்கள் உறைந்தே இறந்து போனார்கள். பொலிசார் அவர்கள் உடலை தற்போது மீட்டுள்ளார்கள்.வழமையாக அவர்கள் செல்லும் பாதையில் சென்றிருந்தால், அவர்கள் உயிர் பிழைத்திருப்பார்கள். ஆனால் கூகுள் மேப்பை நம்பி, ஒரு இடத்து பக்கம் திரும்பியதால், இன்று 2 உயிர் போயுள்ளது. வாழ்க்கை எப்படி எல்லாம் செல்கிறது பாருங்கள்.