ஏழு வயதுச் சிறுவனுக்கு எமனாக வந்த கோவில் மணிக்கயிறு.!! மலையகத்தில் சோகம்..!

கோவில் மணி கட்டப்பட்டிருந்த கயிறு இறுகியதில் 7 வயது சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்தச் சம்பவம், டிக்கோயா டங்கள் தோட்டத்தில், இன்று(11) காலை 10.30 இடம்பெற்றுள்ளது.

மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த டிலுக்சன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறுவன், கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டுருந்துள்ளார். இதன்போது கோவில் மணி கட்டப்பட்டிருந்த கயிறு சிறுவனின் கழுத்தில் இறுகியதால் சிறுவன் உயிரிழந்துள்ளார்.சிறுவன் மணி கயிற்றில் தொங்குவதை அவதானித்த தோட்ட கண்காணிப்பாளர், சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.