திடீரென எல்லா நகரங்களையும் பின்தள்ளி கொரோனாவின் தலைநகராக மாறிப் போன லண்டன்..!! 24 மணி நேரத்தில் எகிறிய கொரோனா..!!

பிரித்தானியாவில் உள்ள சகல நகரங்களையும் பின் தள்ளி, கொரோனா தொற்றில் தற்போது முன்னணியில் இருப்பது லண்டன் என்ற அதிர்சிகரமான தகவல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.இதனால், கிருஸ்மஸ் தினமான வரும் 25ம் திகதிக்கு முன்னரே, லண்டனை மட்டும் லொக் டவுன் செய்ய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மட்டும் 40% விகிதத்தால் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில். கடந்த 24 மணி நேரத்தில் 516 பேர் இறந்துள்ளார்கள். மேலும் சொல்லப் போனால், கொரோனா தடுப்பூசி வந்து விட்டது என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ள காரணத்தால். பலர் சட்ட திட்டங்களை மீறி தேவையற்ற பயணங்களில் ஈடுபடுவதோடு. அசட்டையீனமாகவும் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.