அரசாங்க ஊழியர்களுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு பணம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக்ரஹார காப்புறுதியில், இவர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில், 10 நாட்களுக்கு பணம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதேபோல், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 7 இலட்சம் ரூபாய் பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.